மகாளய அமாவாசை: அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2997 days ago
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். முன்னோர் நினைவாக மகாளய அமாவாசையில் பூஜை செய்து நீராடினால், முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம்.நேற்று புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோயில் அக்னி தீர்த்த கரையில் முன்னோர்களுக்கு பூஜை செய்து, கடலில் நீராடினர். கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். இதனையடுத்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்