மன்னர் குடும்பத்துக்கு தசரா அழைப்பிதழ்
ADDED :2957 days ago
மைசூரு: மைசூரு தசரா, வரும் 21ம் தேதி துவங்கப்படுகிறது. இதற்காக, அரண்மனையில் வசித்து வரும் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பிரமோதா தேவி, யதுவீர் கிருஷ்ணதத்த உடையாரை, பொதுப்பணி துறை அமைச்சர், எச்.சி.மகாதேவப்பா, மாவட்ட கலெக்டர், ரன்தீப், மேயர், ரவிகுமார் ஆகியோர் சந்தித்து, நேற்று முறைப்படி அழைப்பிதழ் கொடுத்தனர். அரசு சார்பில் நடக்கும் விழாவுக்கு, ராஜகுடும்பத்தினர், வம்சத்தினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஊர்வலத்துக்கு தங்க அம்பாரி தருவதற்காகவும், அரண்மனையில் நவராத்திரி பூஜைகளை நடத்துவதற்காகவும், கர்நாடக அரசு சார்பில், அரண்மனைக்கு, 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. இதை பிரமோதா தேவி, ஏற்றுக் கொண்டார்.