உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை கோயிலில் மழைநீர் வெளியேற கால்வாய்

உத்தரகோசமங்கை கோயிலில் மழைநீர் வெளியேற கால்வாய்

கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் அக்னி தீர்த்தத்தில் இருந்து உபரி நீரை வெளியேற்ற கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்த கோயில் அக்னி தீர்த்தத்தில் மழைநீர் நிரம்பினால் பிரம்ம தீர்த்தத்திற்கு உபரி நீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இது நாளடைவில் சிதைந்து போனது. அக்னி தீர்த்தத்தில் நீர் நிரம்பியதும் உபரி நீர் கோயிலுக்குள் புகுந்தது. அவதிபட்ட பக்தர்கள் ராமநாதபுரம் தேவஸ்தான திவான் மகேந்திரனிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து 1.60 லட்ச ரூபாயில் அக்னி தீர்த்ததத்திலிருந்து வெளியாகும் உபரி நீர் பிரம்ம தீர்த்தத்திற்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !