உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளியூர் சாமியார் பொத்தையில் குருபூஜை திருவிழா துவக்கம்

வள்ளியூர் சாமியார் பொத்தையில் குருபூஜை திருவிழா துவக்கம்

வள்ளியூர்:வள்ளியூர் சாமியார்பொத்தை முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை திருவிழா தொடங்கியது.வள்ளியூர் - ஏர்வாடி மெயின்ரோட்டில் ஸ்ரீபுரம் சாமியார் பொத்தையில் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் டிரஸ்ட் உள்ளது. இங்குள்ள முத்துகிருஷ்ண சுவாமிக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் குருபூஜை மற்றும் குருஜெயந்தி விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு நேற்று முன்தினம் காலையில் மலையடிவாரம் வன விநாயகர் கோயிலில் பூஜையுடன் விழா தொடங்கியது. பின் காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் மகாமேடு மண்டபத்தில் முத்துகிருஷ்ண சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை பூஜைகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் முத்துகிருஷ்ண சித்திரகூடத்தில் பூஜையும், பஜனையும் நடந்தது. பின் நிருத்யாலயா மாணவர்கள் விஜய்மாதவன் மற்றும் ரேசிதாவின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா தலைமையில் முத்துகிருஷ்ணசுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !