பார்க்க மட்டுமல்ல கொலு.... படிக்கவும் தான்!
ADDED :2955 days ago
நவராத்திரியில் கொலு வைத்து அம்பிகையை வழிபடுகிறோம். கொலு பொம்மைகள், வாழ்விற்கான படிப்பினையை தருகிறது. பராசக்தி பலவித கோலங்களில் அழகுடன் வீற்றிருப்பதால் கொலு என்று பெயர் வந்தது. அம்பிகைக்கு சிவை என்னும் பெயர் இருப்பதால் சிவை ஜோடிப்பு என்றும் சொல்வர்.