கூழமந்தலில் பித்ரு பகவானுக்கு சிறப்பு பூஜை
ADDED :2955 days ago
கூழமந்தல்: காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள்;, சனி, ராகு, கேது என தனித்தனி சன்னதிகள் கொண்டு அருள்பாளிக்கின்றனர். முன்னேர்களின் அனுகிரகம் பெற மஹாளய பட்சம், மஹாயள அமாவாசை வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. முன்னேர்களின் தெய்வமாக பித்ரு பகவான் விளங்குகிறார். சிறப்பு பெற்றநட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில், மகம் நட்சத்திர அதிதேவதையும் முன்னேர்களின் தெய்வமுமான பித்ரு பகவானுக்கு இன்று (20ம் தேதி ) காலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.