உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சம்பந்தர் பாட்டில் கலைமகள்

சம்பந்தர் பாட்டில் கலைமகள்

சிவனையே வணங்கி வந்த சம்பந்தப்பெருமானின் தேவாரப்பாடல் ஒன்றில் கலைமகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது ஓர் அபூர்வப்பாடல். அவர் பாடிய மயிலை(மயிலாப்பூர்) தேவார (பூம்பாவை) பதிகத்தில், பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், நவராத்திரி பற்றி ஏதும் சொல்லவில்லை. பார்வதிதேவி நீங்கலாக, மற்றவர்கள் பெயரை அவர் பயன்படுத்தியுள்ளாரா எனத்தேடிய போது, ஒரே ஒருபாட்டு சிக்குகிறது.சினமலி அறுபகை மிகுபொறி சிதைதருவகைவளி நிறுவியமனன் உணர் வொடுமலர் மிசைஎழு தருபொருள்நியதமும் உணர்பவர்தனதுஎழில் உருவது கொடுஅடைதகுபரன்உறைவது நகர்மதிள்கனமருவியசிவ புரநினை பவர்‘கலைமகள்’ தர நிகழ்வரே.இந்தப் பாடலில் கலைமகள் என்ற சொல்லை ‘மெய்ஞானம்’ என்ற பொருளில் அவர் பயன்படுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !