மூன்று முக கலைமகள்
ADDED :2961 days ago
திபெத் நாட்டில் மூன்று முகம் கொண்ட சரஸ்வதியை பிரதிஷ்டை செய்துள்ளனர். முகம் மூன்று என்பதால், ஆறு கைகள் உள்ளன. புத்த மதத்திற்குரிய முத்திரைகளை அவள் கொண்டிருக்கிறாள். ஆனால், கையில் கத்தியும் இருக்கிறது. இது ஓர் அபூர்வ அமைப்பு. அறியாமையை வெட்டி அகற்றுபவள் என்ற ரீதியில், கத்தி இவளுக்கு தரப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். இங்குள்ள மற்றொரு சரஸ்வதி சிற்பத்தில், தாமரை மலரில் அமர்ந்து வீணை மீட்டுவது போல் இருக்கிறது. ஆனால், வீணையின் அமைப்பு தற்போது உள்ளது போல் இல்லை.