உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாதிரிப்புலியூரில் காயத்ரி தேவி ஜெயந்தி விழா

திருப்பாதிரிப்புலியூரில் காயத்ரி தேவி ஜெயந்தி விழா

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் காயத்ரி தேவி சமேத விஸ்வப்ரம்ம ஜெயந்தி விழா நடந்தது.  கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் காயத்ரி தேவி சமேத விஸ்வப்ரம்ம ஜெயந்தி விழாவை யொட்டி நேற்று முன்தினம் காலை யாக பூஜை, அபிஷேகம்,   கொடியேற்றம் நடந்தது. மாலை எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற விஸ்வகர்ம சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து காயத்ரி தேவி சமேத விஸ்வப்ரம்மா வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !