நாளை நவராத்திரி ஆறாம் நாள்
நாளை மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணக்கோலம் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சிக்கும், கைலாய நாதரான சிவனுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு நடந்தது. சிவன் தலைமையில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மதுரை மாநகருக்கு எழுந்தருளினர். சுமங்கலிகள் பூரணப் பொற்கலசம், மங்கல தீபங்கள் ஏந்தியபடி வரவேற்றனர். மணமகளின் பெற்றோரான மலையத்து வஜபாண்டியன், காஞ்சனமாலையும் சிவனுக்கு சந்தனம் அளித்து, “எங்கள் மகள் மீனாட்சியை மணந்து பாண்டிய நாட்டில் நல்லாட்சி புரிய வேண்டும்” என வேண்டினர். பிரம்மா தலைமையில் ரிஷிகள் வேள்வி நடத்தினர். லட்சுமியும், சரஸ்வதியும் மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வர, சுந்தரேஸ்வரர் அம்பிகையின் மணிக்கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினார். இதை தரிசித்தால் திருமண யோகம் உண்டாகும்.
நைவேத்யம்: தேங்காய்சாதம், பழவகைகள், பாசிப்பயறு சுண்டல்
பாட வேண்டிய பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.