பக்தர்கள் வசதிக்காக திருமலையில், டோல் ப்ரீ எண்
ADDED :3042 days ago
திருப்பதி: திருமலையில், பக்தர்கள் புகார் அளிக்க, காவல் துறை, டோல் ப்ரீ எனப்படும், இலவச தொலைபேசி அழைப்பு எண் வசதியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில், உள்ள திருப்பதி திருமலையில், 23ம் தேதி முதல், வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை கண்காணிக்க, மத்திய காவல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. திருமலையில், பக்தர்கள் தங்களுக்கு நேரும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க, 1800 425 1111 என்ற, டோல் ப்ரீ எண் வசதியை, காவல் துறை ஏற்படுத்தி உள்ளது. தேவை ஏற்பட்டால், பக்தர்கள், 24 மணி நேரமும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.