பழநி கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலம்
ADDED :2991 days ago
பழநி: பழநி பெரியநாயகிஅம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவை முன்னிட்டு, முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் அம்பாள் அலங்காரத்தில் சிவ பூஜை செய்யும் அலங்காரத்தில் அருள்பாலித்தார். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ராமர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். அபிராமி அம்மன் கோயிலில் கஜலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.