திருப்பரங்குன்றம் கோயில் குளத்தில் தூய்மைப்பணி
ADDED :3041 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்திலுள்ள லட்சுமி தீர்த்த குளத்தில் துாய்மைப்பணி நடக்கிறது.சமீபத்தில் பெய்த மழையில் குளத்திற்கு சிறிதளவு தண்ணீர் வந்துள்ளது. தண்ணீரில் பாசிகள் படர்ந்துள்ளன. சில நாட்களுக்கு முன் கோயிலுக்கு வந்த அறநிலையத்துறை கமிஷனர் ஜெயா, குளத்தை சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவுபடி குளத்திலுள்ள பாசிகள் அகற்றும் பணி துவங்கியது. மலையிலிருந்து வரும் மழைநீர் குளத்திற்குள் செல்லும் பாதையிலிருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன.