திருப்பதியில் பிரம்மோற்சவ கருட சேவை: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED :3130 days ago
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் முக்கியமான நிகழ்ச்சியான கருட சேவை நேற்று இரவு நடந்தது. பல லட்சம் பக்தர்கள் கூடி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று (செப்.27ல்) நடைபெற்றது. சுவாமி கருடவாகனத்தில் வலம்வந்தார். மூலவர் அணியும் வைர வைடூரிய நகைகள் அணிந்து வந்ததால் மூலவரே வருவதாக கருதுவதால் பல லட்சம் பக்தர்கள் கூடி தரிசனம் செய்தனர். தேரோட்டம் 30ம் தேதியும் நடக்கிறது. அக்டோபர் 1ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது.