வழுவதுார் நவராத்திரி சவுந்தரநாயகி சிவ பூஜை
ADDED :2932 days ago
திருக்கழுக்குன்றம்: வழுவதுார் அக்னிபுரீஸ் வரர் கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில், சிவ பூஜை அலங்காரத்தில் சவுந்தரநாயகி அம்மன் எழுந்தருளினார். திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதுார் கிராமத்தில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சவுந்தர நாயகி சமேத அக்னிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 21ம் தேதி துவங்கிய இவ்விழாவில் தினமும், அம்மன் பல அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு சிவ பூஜை அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். விழாவை ஒட்டி, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.