உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் அம்பு விடுதல் நிகழ்ச்சி

திருப்புல்லாணி, உத்தரகோசமங்கையில் அம்பு விடுதல் நிகழ்ச்சி

கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மூலவர்களுக்கு விசேஷ திருமஞ்சனம் ஆராதனை நடந்தது. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட கொழுவின் முன்பாக பஜனை, பிரபந்த பாடல்கள் ஓதப்பட்டன. இன்று காலை 9:30 மணியளவில் நான்குரத வீதிகளில் குதிரை வாகனத்தில் ஆதிஜெக நாதர் உலாவந்து நான்கு திசைகளை நோக்கி அம்பு விடுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

* உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா நடக்கிறது. உற்ஸவர் சந்திரசேகரர் வில் அம்புடன் யானை வாகனத்தில் எழுந்தருளி, வேட்டை மண்டபத்தின் முன்பு காலை 9:00 மணிக்கு அம்பு எய்தும் நிகழ்ச்சி நடக்கிறது. பழமையான வைணவ, சைவ கோயில்களில் இருந்து செல்லும் அம்புகள், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று இரவில் நடக்கும் மகர்நோன்பு திடலில் ராஜராஜேஸ்வரி அம்மன் மூலம் எய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !