பஞ்சவடீ கோவிலில் அன்னதானம்
ADDED :2988 days ago
புதுச்சேரி: புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், தலை வாழை இலை போட்டு, இன்று (30ம் தேதி), அன்னதானம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி - திண்டிவனம் மெயின் ரோடு பஞ்சவடீயில், 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைதோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையான இன்று (30ம் தேதி) மதியம், 1,500 பேருக்கு, தலை வாழை இலை போட்டு உணவு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சாரிட்டபிள் டிரஸ்ட் செய்துள்ளது.