உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்

பொள்ளாச்சி : பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, பொள்ளாச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நான்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பவுர்ணமி கிரி வலத்துக்காக பொள்ளாச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிகளவில் பக்தர்கள் செல்கின்றனர். பக்தர் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பொள்ளாச்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வரும், 5ம் தேதி பவுர்ணமி என்பதால், திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 4ம் தேதி மாலை, 5:00 மணி; 5:30 மணி; 6:00 மணி மற்றும், 6:30 மணி என நான்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், விபரங்களுக்கு, பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தை அணுகலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !