திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பவித்ர உற்சவம் நிறைவு
ADDED :3245 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பவித்ர உற்சவம் நிறைவடைந்தது. கோவில்களில் நடைபெறும் நித்ய பூஜைகளில், ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக நடத்தப்படும் யாக பூஜையே, பவித்ர உற்சவம் என, அழைக்கப்படுகிறது. திருவள்ளூர், பஜாரில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், கடந்த 1ம் தேதி, பவித்ர உற்சவம் துவங்கியது.தினமும், காலை, மாலை, இரு வேளைகளிலும் யாக பூஜை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், காலை, 11:00 மணிக்கு, விசேஷ யாகமும் நடராஜருக்கு, அபிஷேகமும் நடைபெற்றது.நேற்று, இரவு, 9:00 மணிக்கு, யாகம் முடிவடைந்து, பூர்ணாஹூதியுடன், பவித்ர உற்சவம் நிறைவடைந்தது.