மழை வேண்டி அழகுநாச்சியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல்
ADDED :3038 days ago
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள மேலமேல்குடி கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்கள் வருடந்தோறும் மழை பெய்ய வேண்டியும்,விவசாயம் செழிக்க வேண்டியும் கண்மாய்க்கு அருகில் உள்ள வடக்கு வாசல் அழகுநாச்சியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை, அபிேஷகங்கள் நடத்தி அம்மனை வழிபட்டுவருகின்றனர்.இந்த வருடம் புரட்டாசி பொங்கல் விழாவிற்காக கடந்த வாரம் கிராமத்தில் உள்ளவர்கள் காப்பு கட்டிவிரதத்தை தொடங்கினர்.நேற்று காலை அழகுநாச்சியம்ன் கோயிலில் பொங்கல் வைத்தனர்.