பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
ADDED :2970 days ago
விழுப்புரம்: உளுந்துார்பேட்டை அருகே பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை யொட்டி, பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று காலை 6.00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 8.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 8.30க்கு தீபாராதனையும் நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் மணி, சுந்தரவரத பட்டாச்சாரியார் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.