உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருக்கமான பிரார்த்தனை

உருக்கமான பிரார்த்தனை

ஒரு ஊழியர் தன் நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு தேவ ஊழியம் செய்யச் சென்றார். தன்னால் ஆன பிரயத்தனங்களை செய்தார். யாருமே தேவனைப் பற்றி கேட்க வரவும் இல்லை. கேட்ட ஓரிருவரும் அதை ஏற்கவும் இல்லை. தன் முயற்சி தோல்வியடைந்ததால், சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவெடுத்தார். தன் நண்பருக்கு கடிதம் எழுதினார்.  நண்பரிடமிருந்து பதில் வந்தது. நண்பரே! முதலில் நீர் தேவனிடம் உமது பணி சிறக்க வேண்டுமென வேண்டிக் கொள்ளும். உமது வேண்டுதலை கண்ணீருடன் செய்யும். உமது உருக்கமான பிரார்த்தனையை கடவுள் நிச்சயம் ஏற்பார், என்று எழுதியிருந்தார். பைபிளில் உள்ள, “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்  மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது,” என்ற வசனத்தை எழுதியிருந்தார். அந்த வசனத்தை திரும்பத் திரும்ப படித்த அவர், கண்ணீருடன் இயேசுவிடம் வேண்டினார். இயேசு அதை ஏற்றார். உருக்கமாக பிரார்த்திக்கும் ஒவ்வொருவரின் ஜெபத்தையும் ஆண்டவர் ஏற்று அதற்குரிய பலனை தருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !