கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :2913 days ago
நாகர்கோவில்: புரட்டாசி திருவாதிரையை ஒட்டி கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது,.ராஜராஜசோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயில். தஞ்சை பெரிய கோயில் கட்டும் முன்னரே இந்த கோயில் கட்டப்பட்டு விட்டதாக வரலாறு கூறுகிறது. இங்கு குகன் என்ற முருக கடவுள் சிவனை வழிபட்டதால் குகநாதீஸ்வரர் கோயில் என்று பெயர் பெற்றது. இங்குள்ள மூல விக்ரகமான சிவலிங்கம் 5 அடி உயரம் கொண்டது. நேற்று புரட்டாசி திருவாதிரையை ஒட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைக்கு பின்னர் சங்குகளில் புனித நீர் நிறைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 10:30 மணிக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பகல் ஒரு மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.