வாழவந்தாள் அம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2972 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே புதுமாயாகுளத்தில் வாழவந்தாள் அம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா நடந்தது. கடந்த அக்., 2 அன்று காப்புகட்டுதலுடன் துவங்கியது. கோயில் முன்புறம் முளைக்கொட்டு திடலில் கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம், புதுமாயாகுளம் அருகே கற்காத்தி மரைக்கா கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், புதுமாயாகுளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.