உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலுாரில் பாலாற்றுக்கு மகா கங்கா ஆரத்தி

வேலுாரில் பாலாற்றுக்கு மகா கங்கா ஆரத்தி

வேலுார்: வேலுாரில், பாலாற்றுக்கு மகா கங்கா ஆரத்தி நடந்தது. வேலுார் பாலாற்றில், பல ஆண்டுகளுக்கு பின் வெள்ளம் வந்துள்ளது. இதையொட்டி, வேலுார் பாலாற்றில், மகா கங்கா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி, வேலுார் நாராயணி பீடம் சார்பில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. சக்தி அம்மா பங்கேற்று, பாலாற்றுக்கு மகா கங்கா ஆரத்தி எடுத்து வரவேற்றார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !