சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர்சஷ்டி விழா துவக்கம்
ADDED :3005 days ago
நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் கந்தர்சஷ்டி விழா துவங்கியது. நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில் கந்தர்சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. தினமும் சிறப்பு அபிஷேகமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.24 ஆம் தேதி முருகன் சக்திவேல் வாங்குதலும் 25 ஆம் தேதி இரவு சூரசம்ஹார விழாவும் 26 ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சந்திரசேகரன் செய்து வருகிறார்.