பழநி மலையில் கஸ்தூரி: பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது
ADDED :3005 days ago
பழநி: கந்தசஷ்டி விழாவுக்காக பழநி முருகன் கோயில் யானை கஸ்துாரி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டிவிழா நேற்று துவங்கி அக்.,26ல் திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. ஆண்டு முழுவதும் பெரியநாயகி அம்மன் கோயிலில் இருக்கும் யானை கஸ்துாரி, கந்தசஷ்டி விழாவிற்கு மட்டுமே மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படும். நேற்று கந்தசஷ்டி விழா துவக்கத்தை முன்னிட்டு, காலையில் மலைஅடிவாரம் பாதவிநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த கஸ்துாரி, யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்றது. அசுரன்களை முருகப்பெருமான் வதம்செய்து, கந்தசஷ்டி விழா முடியும் வரை தெற்கு வெளிபிரகார மண்டபத்தில் தங்கி இருக்கும்.தற்போது ஏராளமான பக்தர்கள் யானையை வணங்குகின்றனர். சிலர் அலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.