பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு
ADDED :2956 days ago
உடுமலை: உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், சஷ்டி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆறுமுகனை போற்றி விரும்பியதை அடையும் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா, கடந்த, 20ம்தேதி முதல் பிரசன்ன விநாயகர் கோவிலில் காப்புகட்டுதலுடன் துவங்கியது. கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. நாள்தோறும், காலை, 7:00 மணிக்கு யாகசாலைவேள்வி பூஜையும், காலை, 9:00 மணிமுதல் 10:00 மணி வரை, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது. மகா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, 25ம்தேதி, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மற்றும், 26ம்தேதி வள்ளி தெய்வானை சமதே சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.