உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவ உபதேச காட்சி

கந்த சஷ்டி: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவ உபதேச காட்சி

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிவ உபதேச திருக்காட்சி நடந்தது.கடந்த அக்., 20 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். மறுநாள் சிவபூஜை திருக்காட்சி நடந்தது. மூன்றாம் நாளான நேற்று கந்த சஷ்டி கவசப்பாராயண கிரிவலம், திருமுகாற்றுப்படை செந்தமிழ் வேள்வி நடந்தது. தொடர்ந்து சிவ உபதேச திருக்காட்சி நடந்தது. பிறகு யாக வேள்விகள், சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், நாளை வேல் வாங்கும் காட்சி நடக்கிறது. நாளை மறுநாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அக்.,26 ல் திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுவினர் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !