உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரும் 25ல் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா

வரும் 25ல் கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா

ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர், சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை சுப்ரமணியர் கோவிலில், சூரசம்ஹார விழா, வரும், 25ல் நடக்கிறது. இதையொட்டி, நாளை அதிகாலை விநாயகர் வழிபாடு, மஹா கணபதி ஹோமம், மாலை, சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. 25 மாலை, 4:00 மணிக்கு, கஜமுகசூரனை வெற்றி வேலரும், சூரபத்மனை சக்தி ஆயுதத்தால் சக்திவேலரும் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு, திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கந்தசஷ்டி விழாக்குழு, அங்காள பரமேஸ்வரி நண்பர் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !