திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் சங்காபிஷேகம்
ADDED :2907 days ago
ஈரோடு: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் சங்காபி?ஷகம் நடந்தது. திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சியாக, 108 சங்காபி?ஷம் நேற்று நடந்தது. வலம்புரி சங்குகளில் நிரப்பப்பட்ட புனித தீர்த்தத்தை, சிவாச்சாரியார்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். இதில், ஈரோடு, தில்லைநகர், வீ.சத்திரம், வலசு, குமலன்குட்டை, திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.