உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரசம்ஹாரம்: கோவில் விடுதிகள் ’ஹவுஸ் புல்’

சூரசம்ஹாரம்: கோவில் விடுதிகள் ’ஹவுஸ் புல்’

திருநெல்வேலி;திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, விடுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது; தனியார் விடுதிகளில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 25ல், சூரம்சம்ஹாரம் நடக்கிறது. இவ்விழாவை காண, வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் வந்துள்ளனர். பக்தர்களுக்காக, குறைந்த வாடகையில், கோவில் நிர்வாகம் 100க்கும் மேற்பட்ட விடுதிகளை பராமரித்து வருகிறது. இந்த விடுதிகள், இப்போதே நிரம்பியுள்ளன. கோவில் வளாகத்தை சுற்றி, 100க்கும் மேற்பட்ட தனியார் ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளன. கோவில் விடுதிகள் நிரம்பியுள்ளதால், தனியார் விடுதிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !