சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை விழா
ADDED :2956 days ago
தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த, 20ல் கந்த சஷ்டி பெருவிழா துவங்கியது. நேற்று, சுவாமிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நாளான வரும், 26 காலை, பூர்த்தி ஹோமம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மதியம், 1:30 மணிக்கு, இடும்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் தெய்வானை திருக்கல்யாணமும் அதை தொடர்ந்து, பொன்மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்த சிவநேய செல்வர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.