உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சஷ்டி யாக சாலை பூஜை

திருப்பரங்குன்றத்தில் சஷ்டி யாக சாலை பூஜை

திருப்பரங்குன்றம்: சஷ்டியை முன்னிட்டு அக். 20 முதல் யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக்குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி செம்புகளில் புனிதநீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கிறது. அக். 25 காலையில் சண்முகருக்கு தங்க குடத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக். 24ல் கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அக். 25 மாலை 4.30 மணிக்கு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார லீலையும், அக். 26 காலையில் சட்டத் தேரில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கிரிவீதி, ரதவீதிகளில் தேரோட்டமும் நடக்கிறது. கோயில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள்,மாவிளக்கு வைத்து சஷ்டி விரதத்தை முடிப்பர்.

மாலை 4 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தைல புண்ணியாகவாசனமாகி, தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அக். 20ல் சஷ்டி திருவிழா துவங்கியது. உற்ஸவர், மூலவர்கள் வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு தினம் சத்ரு சம்ஹா த்ரிசதி அர்ச்சனை நடக்கிறது. அக். 25ல் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நடக்கிறது. அக். 26ல் சீர்தட்டு அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !