உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலைமலை கோயிலில் கிரிவலத்தை தடுக்க வேலி

தலைமலை கோயிலில் கிரிவலத்தை தடுக்க வேலி

திருச்சி: திருச்சி- நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, தலைமலை கோயிலில், பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுக்க, கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.தலைமலையில், சஞ்சீவராயன் நல்லேந்திர பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது, 3,500க்கும் மேற்பட்ட அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில், குறுகிய விளிம்புடன் உள்ள அபாயகரமான சுற்றுப்பிரகாத்தில்,பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இதை தவிர்க்க, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.இருப்பினும், கடந்த, 14ம் தேதி, மலைக்கோயிலுக்கு சென்ற, முசிறியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், கிரிவலம் சென்ற போது, மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து, இறந்தார். இதையடுத்து, தலைமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், கிரிவலம் செல்வதை தடுக்கும் வகையில், கம்பி வேலி அமைக்கப்பட்டு, நாமக்கல் போலீஸ், சார்பில் எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. கோயில் பிரிகாரத்தில் கிரிவலம் செல்ல முடியாதவாறு, விரைவில் தடுப்பு சுவர் கட்டப்படும், என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !