உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்கு சுற்றுச்சுவர் பக்தர்கள் எதிர்பார்ப்பு

கோவிலுக்கு சுற்றுச்சுவர் பக்தர்கள் எதிர்பார்ப்பு

பல்லடம் : பல்லடம் மாகாளியம்மன் கோவிலுக்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், பழமையான மாகாளியம்மன் கோவில் செயல்பட்டு வருகிறது. அறநிலைய துறைக்கு உட்பட்ட இக்கோவில், பல்வேறு கிராம மக்களின் குல தெய்வமாக விளங்குகிறது. பல்லடத்தின் பிரதான இடத்தில் அமைந்துள்ள, கோவில், பராமரிக்கப்படாமல் பாழடைந்து வருகிறது. பக்தர்கள், மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கோவிலில் நித்ய பூஜைகள் நடந்து. வருகின்றன. இருப்பினும், கோவில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், சமூக விரோதிகள் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், கோவில் வளாகத்தில் மது பாட்டில் கிடந்தது, பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அதனால், பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க, சுற்றுச்சுவர் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. செயல் அலுவலர் பசுவராஜ், ‘கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படும்; பாதுகாப்புக்காக வாட்ச்மேன் நியமிக்கப்படுவார்,’ என அறிவித்தார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதன்பின், நான்கு செயல் அலுவலர்கள் மாறியும் கூட சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. எனவே, சமூக விரோதிகளின் அத்துமீறல்களை தடுக்கும் வகையில், கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !