உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோயிலில் தேவாரப்பாடல்

முருகன் கோயிலில் தேவாரப்பாடல்

அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். செந்தூரில் போரிட்ட முருகன், வெற்றிப் பரிசான தெய்வானையை திருமணம் புரிய எழுந்தருளிய தலம். பராசர முனிவருக்கு ஆறு மகன்கள் இருந்தனர். இந்த ஆறு பேரும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில், சிவபார்வதி  சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை  என்னும் பெயரில் மூலவராக வீற்றிருந்தனர். தெய்வானை திருமணத்திற்குப் பின், இத்தலம் முருகனுக்குரியதாக மாறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !