உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணேச கந்த பெருமாள் கோயிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

கணேச கந்த பெருமாள் கோயிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

தேனி;தேனி என்.ஆர்.டி., நகரில் உள்ள கணேச கந்த பெருமாள் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த அக்.,20ல் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சஷ்டி பாராயணம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேற்று கந்தபெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. *பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயிலில் சுப்பிரமணியர், வள்ளி -தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, சஷ்டி பாராயணம், தீபாராதனை நடந்தது. சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்களுக்கு பிரசாதத்தோடு மிளகுபால் வழங்கப்பட்டது. *தேவாரம் பாலசுப்ரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !