மைசூரு சாமுண்டி மலை நந்திக்கு அபிஷேகம்
ADDED :2905 days ago
மைசூரு: சாமுண்டி மலையிலுள்ள நந்திக்கு, அபிஷேகம் செய்யப்பட்டது. மைசூரு சாமுண்டி மலையில், 350 ஆண்டு பழமையான நந்தி சிலை உள்ளது. தினமும் மலையில் நடை பயிற்சி செய்யும், ‘பெட்டத பாலகா ’ அமைப்பினர் சார்பில், ஒன்பதாவது ஆண்டாக, நந்தி சிலைக்கு மஸ்தாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று, நேற்றும், மஞ்சள், இளநீர், பால், வெண்ணெய், சந்தனம், குங்குமம், தயிர், நெய் உட்பட, 32 மங்கள பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, பல வித மலர்களால் அலங்காரம் செய்யபட்டது. சுற்றுலா பயணியரும், பொதுமக்களும் அபிஷேகத்தை தரிசித்தனர்.