உலக நன்மைக்காக சாதத்தை குவியலிட்டு நேர்த்திக்கடன்
ADDED :3002 days ago
கமுதி: கமுதி ராமனுஜ பஜனை மடத்தில் உலக நன்மைக்காகவும்,மழை பெய்ய வேண்டியும் சாதத்தை குவியலிட்டு, மகேஸ்வர சிறப்பு பூஜை நடந்தது.கமுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி முதல் சனிக்கிழமையன்று உலக நன்மைக்காகவும்,மழை பெய்ய வேண்டியும் சாதத்தை குவியலிட்டு மகேஸ்வர சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இந்த பூஜைக்காக கடந்த 4 சனிக்கிழமைகளில் கமுதி ராமனுஜ பஜனை மடத்தின் சார்பில் பஜனை பாடல்களை பாடி முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்களின் வீடுகளுக்கு சென்றனர். பக்தர்கள் நன்கொடையாக அளித்த பணம்,அன்னதானத்திற்கு வழங்கிய பொருட்களை வைத்து சமைத்து பெரிய அளவிலான நாமமிட்டு கடவுளாக பாவித்து கடந்த சனிக்கிழமை அவற்றிக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமாக வழங்கப்பட்டது.