உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நாக சதுர்த்தி விழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நாக சதுர்த்தி விழா

காஞ்சிபுரம் : நாக சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில், நாக சிலைகளுக்கு, பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர். ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், கேதார கவுரி நோன்பில் இருந்து, ஐந்தாம் நாள், நாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன் படி நேற்று, நாக சதுர்த்தி என்பதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாக சிலை மற்றும் புற்று கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கச்சபேஸ்வரர் கோவிலில் உள்ள நாக சிலைகளுக்கு, பாலாபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமமிட்டு, பெண்கள் பூஜை செய்தனர். புற்றுக்கு பால் ஊற்றி, முட்டை வைத்து, பெண்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !