உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை பூண்டி மகான் 39வது ஆண்டு குரு பூஜை

திருவண்ணாமலை பூண்டி மகான் 39வது ஆண்டு குரு பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே பூண்டி கிராமத்தில், பூண்டி மகானின், 39வது ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, பூண்டி மகான் சித்தர் சமாதிக்கு, செய்யாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கொண்டு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. பின், சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சாதுக்களுக்கு இலவச வேட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு, பக்தி பஜனை பாடல்கள், இன்னிசை கச்சேரி நடந்தது. நிகழ்ச்சியில், கலசப்பாக்கம், பழங்கோவில், பூண்டி, மேலாரணி, வில்வாரணி, எர்ணமாங்லகம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து, பூண்டி மகானை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !