கருமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா பணிகள்
குன்னுார்:குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் அருகே பாரத்நகர் பகுதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவிலில், புதிய அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன் திருப்பணிகள் நடந்து வருகிறது. நவம்பர் மாதம், 1ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விக்ேநஸ்வரர் பூஜை, அனுக்ஞை, புண்யார்ச்சனை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், வாஸ்து பலி பூஜை, பூமி சுத்தி பூஜை, மாலை, 7:30 மணிக்கு கோபுர கலசம் வைத்தல், வேதிகா அர்ச்சனை திரவியாகுதி, ஸ்பர்சாகுதி, மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை, பிரசாத வினியோகம், இரவு, 9:30 மணிக்கு புதிய கருமாரியம்மன் சுவாமி சிலை அஷ்டபந்தன மருந்து சார்த்தி பிரதிஷ்டை விழா நடக்கிறது. 2ம் தேதி காலை, 6:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, வேதிகா அர்ச்சனை, திரவியாகுதி, பூர்ணாஹூதி, நாடிசந்தானம், மகா தீபாராதனை, காலை 7:45 மணிக்கு கலசம் புறப்பாடு, காலை 8:15 மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பாரத்நகர் மக்கள் செய்து வருகின்றனர்.