உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை

ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை

கீழக்கரை, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த செப்., 15 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. நாள்தோறும் மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. மண்டல பூஜையின் நிறைவு நாளை முன்னிட்டு, நேற்று காலை 9 :00 மணியளவில் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, சங்கரன் சங்கரி, பாலஆஞ்சநேயர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசநீரால் அபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாஜகம், தேவதா ஆவாகனம், கணபதி ஹோமம், மகா லட்சுமி சுதர்ஸன ஹோமம் உள்ளிட்டவை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !