உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் திருமுருகன் திருப்பேரவை சார்பில் கந்தசஷ்டி விழா அக்., 20ல் துவங்கியது.தினசரி மாலை முருகனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. அக்.,26 காலையில் சண்முகார்ச்சனையும், மாலையில் சூரசம்ஹாரமும் நடந்தன. நேற்று காலை 9.45 மணிக்கு திருமுருகன் பேரவை அலுவலகத்திலிருந்து பக்தர்கள் சீர் வரிசை எடுத்து திருத்தளிநாதர் கோயில் திருநாள் மண்டபம் வந்தனர். தொடர்ந்து கோயிலில் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள முருகன் சன்னதியில் மணக்கோலத்தில் சுப்பிரமணிய சுவாமியும் தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர். காலை 10.15 மணிக்கு கணபதிேஹாமம், வாஸ்துசாந்தி நடந்தது.பின்னர் பாஸ்கர குருக்கள், ரமேஷ்குருக்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது. திரளாக பெண்கள் கூடி திருக்கல்யாணத்தை தரிசித்தனர். பின்னர் அன்னதானம் நடந்தது. தொடர்ந்து கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !