ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் காணிக்கை ரூ.64.53 லட்சம்
ADDED :2924 days ago
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூபாய் 64.53 லட்சம் வருவாய் கிடைத்தது.ராமேஸ்வரம் கோயிலில் 15 நாள்களுக்கு பிறகு நேற்று ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதி உண்டியல்கள் திறக்கப்பட்டடது. இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில், காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூபாய் 64 லட்சத்து 53 ஆயிரத்து 580 ரூபாயும், தங்கம் 41 கிராம், வெள்ளி 2 கிலோ 280 கிராம் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், முதுநிலை கணக்காளர் பாண்டியன், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.