உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலதண்டாயுதபானி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

பாலதண்டாயுதபானி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபானி முருகன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் அருகில், பாலதண்டாயுதபானி முருகன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நண்பகல் 12:40 மணியளவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், இளநீர், திராட்சை, பழரசம் போன்ற பொருட்களால் சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. பின்னர், முருகனுக்கு மலர்களால் ராஜ அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணராயபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !