உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமலர் செய்தி எதிரொலி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோபுரத்தில் செடிகள் அகற்றம்

தினமலர் செய்தி எதிரொலி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோபுரத்தில் செடிகள் அகற்றம்

காஞ்சிபுரம்: நமது நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காமாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ராஜகோபுரத்தில், செடிகள் வளர்ந்துள்ளதால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகி, கோபுரத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக, நமது நாளிதழில், நேற்று புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதை பார்த்த கோவில் நிர்வாகத்தினர், நேற்று காலை, கோபுரத்தில் இருந்த செடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !