கசவனம்பட்டியில் குரு பூஜை விழா
ADDED :3014 days ago
கன்னிவாடி, கசவனம்பட்டியில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயிலில், குரு பூஜை விழா, அக். 24ல் துவங்கியது. விரதமிருந்த பக்தர்கள், சிவனுாரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சதுரகிரி, சோமலிங்கபுரம், காசி, ராமேஸ்வரம், பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, புனித நீர் எடுத்து வந்தனர். கிராம விளையாடலுடன் தீர்த்தாபிேஷகம், யாகம், 1008 படி பாலாபிேஷகத்துடன் குரு பூஜை நடந்தது. அன்னதானம் நேற்று நடந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிேஷகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.