கால பைரவர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2936 days ago
ஊத்துக்கோட்டை : கால பைரவர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது, மகா கால பைரவர் கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை, கும்பாபிஷேக விழா நடந்தது.கடந்த, 25ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 9:45 மணிக்கு பைரவர், விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரக கோவில்களில் உள்ள கலசத்திற்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். திருப்பதி, திருமலா பஜனை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.